ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சின்ன பலூன்


ஊத ஊத விரியுது-vallamai.com
உப்பி உப்பிப  பருக்குது
கன்னம் கூட வலிக்குது
விம்மி விம்மி வீங்குது
வாயும் கூட வலிக்குது
வண்ண வண்ண பலூன் பாரு
பச்சை பலூன் நீல பலூன்
செம்பருத்திப் பூவு போலே
சிவந்திருக்கும் சின்ன பலூன்
மஞ்சள் பூசிக் குளிச்சது போல்
மங்கலமாய்ச் சிரிக்கும் பலூன்
ஒன்று மாற்றி ஒன்று தான்
அண்ணன் ஊத தங்கை பார்க்க
வயிறு நிறைய காற்று குடித்து
வீங்கிக் கொண்டு போகுது
போதும் போதும் என்கிறாள்
சின்னத் தங்கை நந்தனா
அவள் அஞ்ச அஞ்ச ஊதி ஊதி
பட் படார் பட் படார்
விரலை ஆட்டிச் சொல்ரிறாள்
அளவை மீறிப் போனதாலே
நடந்த கதையை பாரு நீ
பாட்டி போலே பேசாதே
பஞ்சு மிட்டாய் சாப்பிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக