வெள்ளி, 1 மார்ச், 2013

ஆசிரியர் இன்று தூங்கினால் நாடு நாளை தூங்கும்

ஆசிரியர் இன்று தூங்கினால் நாடு நாளை தூங்கும்
 ஆசிரியப் பணியே அறப்பணி என்பது பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமன்று. உயர்கல்வியினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். வெறும் பொழுதுபோக்கிற்காகவும், புகழுக்காகவும், வருமானத்திற்காகவும் கல்வி என்ற நிலையினை ஆசிரியர்கள் மாணவர்கள் மனதிலிருந்து அகற்றிட வேண்டும்.தானும் வாழ்ந்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
எண்ணத்தில் தெளிவு, உறுதியான குறிக்கோள்,வாழ்க்கை வாழ்வதற்கான மூல காரணம் இவற்றை ஆசிரியர் தெளிவுபட மாணவரிடத்தில் உரைத்தல்வேண்டும். மாணவர்கள் பலவிதமான சூழலில் (பள்ளிக்கல்வி,உயர்கல்வி)கல்வி கற்க ஆசிரியரை அணுகலாம். ஆசிரியரானவர் நன்னூலில் குறிப்பிட்ட ஆசிரியருக்குரிய கொள்கையுடன் வழி நடத்துதல் அவசியமாகிறது.
ஆசிரியர் இன்றைய சூழலில் மாணவரிடம் பேசிப்பழகி அவர்களை வழிநடத்தும் நண்பனாக மாறுவதில்லை. பெற்றோரும் குழந்தைகளிடம் அமர்ந்து பேசுவதில்லை.வெறும் பணம் காய்க்கும் மரங்களாய் , உறவுகளுக்கு மத்தியில் தனது குழந்தைகள் குறித்த வெற்றுப்புகழ்-குறித்த செய்திகள் இவை குறித்து மட்டும் பேசி வரும் பெற்றோர்(ஆசிரியர்) தனது குழந்தைகளின் சொல்லையும் காது கொடுத்துக் கேட்கவேண்டும்.
நல்ல பள்ளி என எல்லா வசதிகளையும் மட்டும் அளித்திடும் இடமாக மாணவருக்கு இருப்பதை மட்டும் பார்த்து இன்றைய பெற்றோர்  தங்களது குழந்தைகளை  ----பள்ளியில், கல்லூரியில்  சேர்த்து விடுகின்றனர்.
  பள்ளியோ, கல்லூரியோ-அதில் இருக்கும் ஆசிரியர்,நண்பர்கள் வட்டம்-இவற்றினால் ஒருவர் தடம் மாறிப்போக நேரிடுகிறது. தீவிரவாதம் இந்நிலையில்தான் தோன்றுகிறது. ஆராய்ச்சி மாணவர்களும்(வருங்கால-ஆசிரியர்கள்) தன்னிலை அறிந்து சுயநலப்போக்கினை உதறிப் பொதுநலம் கருதி வாழ்தல் வேண்டும். கையூட்டு அளித்தால் மட்டுமே பணி என்ற நிலை வந்தால் அப்பணியினை ஏற்கக் கூடாது.
  வாழ்வின் பொருளுக்கு இலக்கணமே ஆசிரியர் தொழில் ஏற்பவர்கள் தான். அத்தகைய தொழிலில் இருப்பவர்கள் உலக நடப்பறிந்து  வாழ வேண்டும். வாழும் தேவையின் பொருட்டுப் புனிதமான ஆசிரியர் தொழிலை மறந்து பொய்யானகடமைக்காக, குடும்பத்திற்காக, அடுத்தவரின் கட்டாயப்படுத்துதலுக்காக,உயிருக்குப் பயந்து வாழ்வதற்காக என்ற பல நிலைகளையும் ஏற்று வாழும் மனநிலை இருப்பவர்கள்  கண்டிப்பாக ஆசிரியத் தொழிலை ஏற்று வாழக்கூடாது. மனதில் தூய எண்ணம் இல்லாதவர்கள் எதற்காக ஆசிரியர் தொழிலுக்கு வரவேண்டும்? ஒரு சாண் வயிற்றுக்காகப் பிழைக்க வேறு தொழில்கள் இல்லையா?
இன்றைய நிலையில் ஆசிரியர்கள் சூழ்நிலை அறிந்து ஆசிரியருக்குரிய நெறிமுறையிலிருந்து விலகாமல் காந்தி, விவேகானந்தர் கொள்கையின்படி வாழ்தல் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக