வெள்ளி, 18 அக்டோபர், 2013

தமிழ்மொழி

                                                  தமிழ்மொழி 

தமிழ்மொழி இன்றைய காலகட்டத்தில் பணிநியமனம்  பெருமளவு இல்லாத காரணத்தினால்  மாணவர்கள் தமிழ்மொழியினைப் படிக்க முன்வருவதில்லை. தமிழ்மொழியின் பெருமைகளை அறிந்த சான்றோர் பலரும்  தமது புகழைப் பாடிப்  பொழுதைக்கழிப்பதிலேயே காலம் கழிக்கின்றனர்.
தமிழ்மொழி கற்பதனால் யாதொரு பயன் இல்லை என்பது வருத்தப்படக்கூடிய செய்தி.
தமிழ்மொழி கற்பதால் பண்பாடு வளரும். பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களும் அதை உணர்த்தியுள்ளன. ஆனால் ஆசிரியர்களோ, மனப்பாடம் செய்விக்கும் இயந்திரங்களாக மாணவர்களை உருவாக்கி விட்டனர்.இதனால் பண்பாடு குறித்துக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அதன்வழி நடப்பதில்லை.
பணத்திற்காக உருவாகும் ஆசிரியர்கள் இருக்கும்வரை பண்பாடு நிறைந்த மாணவர் சமுதாயம் உருவாகாது.இதனைப் புரிந்து கொண்டு வாழும் நல் உள்ளங்களும் கடமைக்காக வாழ்ந்து  வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக