புதன், 13 நவம்பர், 2013

விருந்தே ஆயினும் அளவோடு உண்

                         விருந்தே ஆயினும் அளவோடு உண்

நமது வீட்டில் மட்டுமே  தேவைப்பட்ட உணவுவகைகளை உண்டு மகிழவேண்டும். வெளியிடங்களில் தயார் செய்யப்படும் உணவுவகைகள் தரமற்றவை.அவசியம் ஏற்படும்போது மட்டுமே சுத்தமான உணவுவகைகளை வெளியிடங்களில் நாம் உண்ண வேண்டும்.விருந்தினர் பசித்திருக்க நாம் மட்டும் உண்ணுவது முறையன்று. அதைப்போல் விருந்தினர் வீட்டிலும் அளவோடு உண்பது நாகரீகமானது. வெளியிடங்களில் உணவு உண்ண நேர்ந்தால் இருப்பதை மகிழ்வோடு உண்ணக் கற்றுக்கொள்ளவேண்டும். தேவையற்ற வேதிப்பொருட்கள் கலந்துள்ள தின்பண்டங்களைக் குழந்தைகள் வாங்கி உண்பதால் உடல்நிலை பாதிக்கும்.பெற்றோர் குழந்தைகளிடம் பணம் தேவையானவற்றிற்கு மட்டுமே தர வேண்டும். எதிர்வீட்டுப் பெற்றோர் அவர்கள் குழந்தைக்கு ஆடம்பரமான பொருட்களை அளிக்கிறார்கள் என நாமும் நமது குழந்தைக்குத் தேவையில்லாதவற்றை அளிக்கக்கூடாது. குழந்தைகளிடம் விருப்பப்பட்ட உணவுவகைகளை வீட்டில் உண்ணப் பழக்குதல் வேண்டும்.
கட்டுரையைத் தொடர்ந்து எழுதுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக