வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பயிற்சித்தாள்-7

(அங்கு, என, எனது, இன்று,அதன்)-பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அன்புள்ள பெரியப்பா, மற்றும் சித்தப்பாவிற்கு,
 -------அப்பா இங்கு நலமாய் இருக்கிறார்.----------- அனைவரும் நலமாக இருப்பீர்கள்  நினைக்கிறேன். எனது உடன்பிறப்புகள் நலமாய் இருக்கின்றனரா? தாய்மொழி கற்று,அதன்வழி நடப்பதன் பெருமையை இன்றுதான் உணர்ந்தேன்.எனது மாணவி அன்று கற்ற பாடத்தை எத்தனையோ வருடத்திற்குப் பின் இன்று நினைவுபடுத்தி ----------வழி நிற்கிறாள்.
தாங்கள் கூறியதுபோல் ஆசிரியத்தொழில் மட்டும் இல்லாதிருந்தால் --------- உண்மையான மனிதர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறினீர்கள். இன்று அதன் பெருமையை உணர்ந்தேன். மறக்க முடியாத தினமாகக் கருதுகிறேன்.எல்லோரும் பூமியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டால் நான் எங்கு செல்வது பெரியப்பா?போவதைப்பற்றியே அனைவரும் பேசுகிறீர்களே?
இருண்டு கிடக்கும் வான்வெளியைப்போல ஒவ்வொரு பகலும் ஏன் விடிகிறது? என நான் அலுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.யாருக்காக நான் என்ற வினாவிற்கு விடை இதுதான் என்று கடவுள் சொல்லுகிறதா? என்று தெரியவில்லை.புத்தகங்களே உறவுமுறைகளாக மாறிவிட்ட எனக்கு குண்டூசியின் தாளில் உரசுகிற ஒலியின் சப்தம்கூடப்  பிடிக்காமல் போய்விட்டது.
நிறைய கருத்துகள் நேரு இந்திராவுக்கு எழுதியதைப்போல நீங்களும் எழுதுங்கள். எத்தனையோ பேருக்கு ஒளிகாட்டிய அறிவுவிளக்கு எனக்கு மட்டும் மௌனமாய் இருப்பது ஏன்? கற்றுக்கொடுப்பதை வைத்து மாணவனையும், ஆசிரியரையும் உருவாக்குபவன் மட்டுமே அறிவாளி.
சில நேரங்களில் ஆத்மார்த்தமான மௌனங்கள் எதிர்முனையில் தாங்க இயலாத சோகத்தை அளிக்கும் என்பதை ஏன் மறந்தீர்கள்?
கல்வி கற்பது படிப்பதற்கும், அதன்வழி நடப்பதற்கும் என்பதைக் கற்றுக்கொடுத்த நீங்கள் இன்னமும் பல ஊக்கத்தை எனக்கு அளியுங்கள்.
அடிக்கடி கடிதம் எழுதுங்கள்.
                                                                                                                       இப்படிக்கு,
                                                                                                               ------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக