ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கதை-பாடல்-கேட்டல் திறன் பாடல்



கதை-பாடல்-கேட்டல் திறன்
பாடல்
தாகம் கொண்ட
காகம் ஒன்று
எட்டி எட்டி பார்த்தது!
எங்கும் அதற்கு
 தண்ணீர் தான்
கொஞ்சம் கூட இல்லையே!
தேடித் தேடிப் 
பார்த்த காகம்
தோட்டத்தினில் நடுவினுள்
சாடியில் நீரைக்
கண்டது.
எட்டி எட்டிப்
பார்த்த காகம்
ஏமாந்து போனதே!
எட்டாத தூரத்தில்
தண்ணீரும் இருக்குதே?
யோசித்துப் பார்த்த
காக்கையும்
ஒய்யாரமாய் கழுத்தை
கொஞ்சம் சாய்க்கையில்
கற்களைத்தான் கண்டதே!
கற்குவியலைக் கண்டதும்
ஞானம் அதற்குப்
பிறந்ததே!
கல்லை எடுத்து
சாடிக்குள் போட
தண்ணீரும் தான்
கிடைத்தது.
தாத்தாவுடன்
காகமும்
விளையாடத்தான் சென்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக