ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

காட்டுக்குள்ளே திருவிழா



காட்டுக்குள்ளே திருவிழா
கானம் பாடும் பெரும்விழா
குரங்கு வந்து குதிக்குது!
கூடி கும்மாளம்தான் அடிக்குது!
மலை எங்கே இருக்குது!
மரத்தின் அடியில் இருக்குது!
நீரில் யார் இருக்கின்றார்?
யானை மாமா இருக்கின்றார்
தவளை அண்ணா பாருங்கள்!
காளான் மீது  செல்கிறார்!
குயிலக்கா பாடுகிறாள்!
கூட்டமாக வாருங்கள்!
வானம் இறங்கி வாராதோ!
வாஞ்சையுடன் என்னுடன் பாடாதோ??
நிலவும் கீழே இறங்குமோ?
நத்தையுடன் பேசுமோ?
கனவுலகத் திருவிழா
விடிந்தவுடன் மறைந்தது.


ü  காக்கா!காக்கா! பறந்து வா!
பசுவே! பசுவே! நடந்து வா!
 மயிலே! மயிலே! ஆடி வா!
அத்தை எங்கே சென்றாரோ?
பத்து நாளாய் காணவில்லை
நத்தையம்மா தேடுகின்றார்.
வாத்து எங்கே இருக்கும்?

கரகம் எங்கே இருக்குது?
பாப்பா தலையில் இருக்குது!
காகம் எங்கே இருக்குது?
மரத்தின் மேலே பறக்குது!
சக்கரம் யாரு செஞ்சது?
தச்சர் வந்து செஞ்சார்!
தாத்தா என்ன சொன்னார்?
காந்தி வழி நடக்கச் சொன்னார்!
மாமா என்ன தந்தார்?
பழம் வாங்கித் தந்தார்!
நகத்தின் சுத்தம் நாமும் காப்போமா?
நன்றியுள்ள நாய்க்கு
நாமும் கொஞ்சம் உணவளிப்போம்!
எல்லா உயிரையும் மதித்திடுவோம்
ஒற்றுமையாய் நாமும் வாழ்ந்திடுவோம்.

                     




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக