திங்கள், 30 மார்ச், 2015

மதம்-விழிப்புணர்வு

   மதம் 
இன்றளவில் மாணவரிடையே சாதியோ,மதமோ காணப் படுவதில்லை. பணியாற்றும் இடங்களிலும்,பிற இடங்களிலும் மட்டுமே இவ்வுணர்வு காணப்படுகிறது. இத்தகைய உணர்வினைத் தூண்டுபவர் யாரென நோக்கிடினில் சுயநலத்துக்காக இயங்குபவர் என்பது தெளிவாகத்தெரியும்.காரணம் அடித்தட்டு மக்கள் தனது வாழ்க்கைப்பாதையைக் குடும்பம் என்ற சிறிய வட்டத்தில் அடக்கிவிடுகின்றனர்.அவர்கட்குத் தெரிந்ததெல்லாம் இறைவன்,இன்ன சாதிக்கு இன்னகடவுள்,இன்ன மதத்திற்கு இன்ன கடவுள்-தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான்.மதத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் அவர்களை வழிப்படுத்தும்.அத்தகைய இறைவனே தலைமைத்துவம் பெற்றவன்.இக்கருத்துகளைக்கொண்டே அவர்கள் வாழப்பழகிவிட்டனர்.ஆனால் எல்லாக்கடவுள்களும் நமது காலத்திற்கு முன்னர் வாழ்ந்து வந்தவர்கள்.அவர்கள் கூறிய கருத்துகளைத்தான் நாம் பின்பற்றுகிறோம்(உருவவழிபாடு,உருவவழிபாடின்மை) என்பது எத்தனை மக்களுக்குத் தெரியும்? அத்தகைய மதமோ,சாதியோ அன்று இருந்ததா? இல்லையே! நிலத்தின் அடிப்படையில் அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் மக்கள் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.சாதியே இடைப்பட்டதுதானே? இதிலென்ன வன்முறை,தீவிரவாதம்,மதத்துவேஷம்.
ஒன்றுபட்ட அன்புநிறைந்த  சண்டையற்ற உலகத்திற்கு இவையெல்லாம் தேவையா!இவைபோன்ற சிந்தனைகளை ஆசிரியர் பாடப்பொருளினை அளிக்கும்போதே மாணவர்களிடம் விதைக்கவேண்டும்.பாடம் என்பது மனப்பாடமாக இருப்பதற்கல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்வண்ணம் நடத்தவேண்டும்.இந்த எண்ணம் தெளிவாக இருந்துவிட்டால் மாணவன் வெற்றிகரமாக வருங்காலத்தில் சிறந்து விளங்குவான்.பின் எதற்காக சான்றிதழில் வருகிறது என்ற வினா எழும்.அதை ஆசிரியர் திறமையாகச் சமாளித்து மாணவரது ஐயப்பாட்டினை நீக்க  வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக