சனி, 25 ஏப்ரல், 2015

செய்முறைப் பயிற்சி

                      செய்முறைப் பயிற்சி
எழுத்துகளைப் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதற்குத் தகுந்த வழி விளையாட்டுமுறையில் எழுத்துகளைக் கற்பித்தல் சிறந்த முறையாகும்.
உதாரணத்திற்குக் குழந்தைகளுக்கு பலூன்கள்,மிட்டாய்கள்,அப்பளம் போன்றவை மிகவும் பிடிக்கும்.இவற்றை வைத்துக்கொண்டு எழுத்துகளைக் கற்பிக்கலாம்.
கற்பிக்கும்முறை
பலூன்களில் எழுதுதல்
பலூன்களுக்கு இடையே எழுத்துகளை எழுதி அடையாளப்படுத்துதல்
குறிப்பிட்ட பலூன்களை அவரவர் இடத்தில் ஒன்று வைத்துவிட்டு வண்ணமிட்ட அடையாள எழுத்தினை எடுக்கச் செய்தல்
நான்கு பலூன்களை ஒன்றாகக் கட்டி அதில் வேறுபட்ட எழுத்தினை அடையாளம் காணச் செய்தல்
மாவினில் எழுத்துகளை எழுதிப் பயிற்சி அளித்தல்
அப்பளத்தில் பெயரினை எழுதி(உணவில் பயன்படுத்தும் வண்ணங்களைப்பயன்படுத்தலாம்) அடையாளங்காணச் செய்தல்
ஓட்டப்போட்டி நடத்துதல்
போன்ற பலவிதங்களிலும் தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கலாம்.
சராசரியாக ஒரு மாணவருக்கு பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் உயிரெழுத்துகளை முழுமையாகக் கற்பிக்கலாம்.பயிற்சித்தாள்கள்
புள்ளியிடுதல்
நிழலிடுதல்
வரிசைப்படுத்துதல்
வேறுபட்டதை அடையாளங்காணுதல்

போன்ற முறைகளில் அமையவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக